சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/அரசியல்/பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் பழங்குடியின மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர் வன்னி அரசு
அரசியல்

பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் பழங்குடியின மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர் வன்னி அரசு

🕒 14 செப்., 2026, 03:51 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் பழங்குடியின மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர் வன்னி அரசு

AI Highlights

  • பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள பழங்குடியின மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்த சமூக நீதி தவறை அமைச்சர் வன்னி அரசு; பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே காரையாறு வனப்பகுதியில் அகஸ்தியர் காணி குடியிருப்பு சின்ன மைலார் பெரிய மைலார் இஞ்சுக்குழி ஆகிய இடங்களில் காணி பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள காணி பழங்குடியின சமுதாய மக்களை காரையாறு சின்ன மயிலாறு பகுதியில் சந்தித்து கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். முன்னதாக காணி பழங்குடியின சமுதாய மக்கள் அவர்களது பாரம்பரிய இசை கருவிகளை வாசித்து தங்கள் முறைப்படி அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆகியோருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து அங்கு விளையும் பொருட்களை பார்வையிட்ட அமைச்சர், அங்கு நடைபெறும் இரும்பு பாலப் பணிகளையும் jஅங்குள்ள அரசு உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளியும் ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசுகையில், காணி பழங்குடியின மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, தற்போது 10-ஆம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியை 12-ஆம் வகுப்பாக உயர்த்த துறை சார்ந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின மக்களின் கல்வி மற்றும் உறைவிடப் பள்ளி மாணவர்களின் ஸ்காலர்ஷிப்பிற்காக மட்டும் 32 கோடி ரூபாயும், மாநில பழங்குடியினரின் ஒட்டுமொத்த நலனுக்காக 466 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட வேண்டியுள்ளது. இந்த நிதியை முழுமையாகப் பெற்றுத் தர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காணி குடியிருப்புப் பகுதியில் தயாரிக்கப்படும் வனப் பொருட்களை முறைப்படுத்தி, அவற்றை நவீன முறையில் மார்க்கெட்டிங் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது என்றார். இதில் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த மோகன், பழங்குடியின இயக்குனர் அண்ணாதுரை உட்பட பலர் பங்கேற்றனர்..

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔